என் தாயின் கருவிலோ நான் பத்து மாதங்கள்
பூமி தாயே! உன் மடியில் அல்லவா மீதி காலங்கள்...
என் உயிர் தெரித்தது என் தாயின் கருவறையில் தான்
ஆனால், என் உயிர் செழித்தது உன் மடியில் அல்லவா...
உன்னை நான் மிதித்தேன், உதைத்தேன், வெட்டினேன், குத்தினேன் - ஆனால்
நீயோ! என்னை உன் மடியில் சாந்தமாக உறங்க வைத்தாய்...
இம்மக்கள் செய்த பிழைகளை பொறுத்து உன் அன்பு கரங்களை நீ நீட்டினாய்
ஆனால், இம்மாக்களோ உன்னை காக்க ஒரு கரம் கூட நீட்டவில்லையே...